ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீமுத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். இதில் 9-ம் நாள் உற்சவத்தில் தேரோட்டம் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா, நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, நேற்று காலை மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6:30 மணியளவில் கோவில் பலி பீடம் அருகே உள்ள கொடிகம்பத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பஞ்சமி திதியில் கொடியேற்றப்பட்டது. கோவில் குருக்கள் நாகராஜ், சோமு ஆகியோர் கொடியேற்றி வைத்தனர். இரவு 9 மணியளவில் சர்வ அலங்காரத்தில் நந்தி வாகனத்தில் பஞ்ச மூர்த்தி சுவாமி வீதியுலா நடந்தது. வருகிற 1-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story