பிரம்மோற்சவம்: திருப்பதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்


பிரம்மோற்சவம்: திருப்பதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

திருப்பதிக்கு 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

2023-ல் திருப்பதி, திருமலையில் 2 முறை பிரம்மோற்சவம் திருவிழா நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வாயிலாக சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பஸ்களுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. www.tnstc.in tnstc, official app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story