புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட கிளை நூலகம்


புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட கிளை நூலகம்
x

புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட கிளை நூலகத்தால் வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர்

வாடகை கட்டிடத்தில் இயங்கிய நூலகம்

கரூர் மாவட்டம் வெள்ளியணையில் 1964-ம் ஆண்டு கிளை நூலகம் தொடங்கப்பட்டது. இந்த நூலகத்தின் மூலம் வெள்ளியணை, ஒந்தாம் பட்டி திருமலைநாதன் பட்டி., வெங்கடாபுரம், செல்லாண்டிபட்டி, பச்சப்பட்டி, மாமரத்துப்பட்டி, ஜல்லிபட்டி, குமாரபாளையம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.

இந்த நூலகம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை கட்டிடத்தில் தான் இயங்கி வந்தது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அந்த சிறிய வாடகை கட்டிடத்தில் புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கே போதுமான இடவசதி இல்லாமல் இருந்ததால், அமர்ந்து படிக்க முற்றிலும் இடம் இல்லாமல் நூலகத்திற்கு வருவோர் அவதிப்பட்டனர்.

விசாலமான இடத்திற்கு மாற்றம்

இதுகுறித்து பலமுறை அரசின் கவனத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனாலும் புதிய கட்டிடம் கட்டப்படாமல் இருந்து வந்தது. இந் நிலையில் வெள்ளியணை பஸ் நிறுத்தம் அருகே அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட நூலக கட்டிடம் தற்போது சீரமைக்கப்பட்ட நிலையில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது.

இந்த கட்டிடத்திற்கு கிளை நூலகத்தை மாற்ற ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தற்போது கிளை நூலகம் இந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு விசாலமான இட வசதியுடன் செயல்பட தொடங்கியுள்ளது. இது நூலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கும், வாசகர்களுக்கும் பயன் அளிப்பதாக உள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Next Story