"கீழ்பவானி வாய்க்கால் கரைகளில் ஏற்பட்ட உடைப்பு 10 நாட்களில் சீரமைக்கப்படும்" - அமைச்சர் முத்துசாமி
வாய்க்காலின் கரைகளில் ஏற்பட்ட உடைப்பு 10 நாட்களுக்குல் சீரமைத்து தரப்படும் என்று அமைச்சர் முத்துசாமி உறுதியளித்தார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலின் இருகரைகளிலும் ஏற்பட்ட உடைப்புகளை தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர், வாய்க்காலின் கரைகளில் ஏற்பட்ட உடைப்பு 10 நாட்களுக்குல் சீரமைத்து தரப்படும் என்று உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, தண்ணீரில் மூழ்கிய விளைபொருட்களுக்கான நிவாரணம் வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு கணக்கெடுப்பு நடத்தி, அதற்கேற்ற வகையில் நிவாரண தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Related Tags :
Next Story