தியாகதுருகம் அருகேகோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
தியாகதுருகம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மா்ம மனிதா்கள் திருடி சென்றுவிட்டனா்.
கள்ளக்குறிச்சி
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு ஊராட்சிக்கு உட்பட்ட கொ.பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் ரமேஷ் (வயது 37) என்பவர் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று வழக்கமாக கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும் காலையில் கோவிலுக்கு சென்று பார்த்தபோது முன்பக்க இரும்பு கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடுபோயிருந்தது. உண்டியலில் ரூ.2 ஆயிரம் காணிக்கை பணம் இருந்து இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story