கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
மதுரை
திருமங்கலம்
திருமங்கலம் அருகே மைக்குடி கிராமத்தில் பஞ்சமுக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு பூசாரியாக இருப்பவர் பாண்டி (வயது 54). இவர் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும் நேற்று காலை கோவிலுக்கு வந்து ள்ளார். ஆனால் கோவில் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் அடிப்படையில் திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story