பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்


பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
x

ஆற்காட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ஆற்காட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

காலை உணவு திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து இன்று அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி சார்பில் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு பகுதி 1-ல் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக உணவு தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

இதனை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று பார்வையிட்டார்.

அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

பின்னர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ஆற்காடு நகராட்சி வடக்கு தோப்புக்கான அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன். ஆற்காடு தொகுதி ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் குபேந்திரன், நகராட்சி பொறியாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story