ஜெயின் கோவில் உண்டியலை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு
மயிலம் அருகே ஜெயின் கோவில் உண்டியலை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு
விழுப்புரம்
மயிலம்
மயிலம் அருகே உள்ள கீழ் எடையாளம் கிராமத்தில் ஜெயின் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் வழிபாடு முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளனர். மீண்டும் நேற்று காலையில் வந்து பார்த்தபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் காணிக்கை பொருட்களை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து மேற்கண்ட பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவில் மதில் சுவர் வழியாக உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணம் மற்றும் காணிக்கைப் பொருட்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, உண்டியலை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story