முருகர், வள்ளி, தெய்வானை சிலைகள் உடைப்பு; 3 பவுன் நகை திருட்டு


முருகர், வள்ளி, தெய்வானை சிலைகள் உடைப்பு; 3 பவுன் நகை திருட்டு
x

வந்தவாசி அருகே பாலசுப்பிரமணியன் கோவிலில் முருகர், வள்ளி, தெய்வானை சிலைகளை உடைத்து, 3 பவுன் நகை, பணம், வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே பாலசுப்பிரமணியன் கோவிலில் முருகர், வள்ளி, தெய்வானை சிலைகளை உடைத்து, 3 பவுன் நகை, பணம், வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிலைகள் உடைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தென்சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள மலை மீது கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஊர் பொதுமக்கள் சேர்ந்து வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கட்டப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பூசாரி விநாயகம் என்பவர் வழிபாடு செய்து விட்டு கோவிலை பூட்டி கொன்டு சென்று விட்டார்.

இன்று காலை கோவிலை திறந்து பார்த்த போது பக்கவாட்டில் உள்ள தகரசீட்டை பெயர்த்து எடுத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வள்ளி, தெய்வானை மற்றும் முருகர் ஆகிய 3 மூலவர் கற்சிலைகளை துண்டு துண்டாக உடைத்துள்ளனர்.

மேலும் பீரோவில் இருந்த 3 பவுன் தங்க தாலி, ரூ.15 ஆயிரம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுகுறித்து விநாயகம் வந்தவாசி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அதன்பேரில் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், மோகன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை ேதடி வருகின்றனர்.

இந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story