வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
அஞ்சுகிராமம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
அஞ்சுகிராமம்,
அஞ்சுகிராமம் அருகே உள்ள மருங்கூர் ராமநாதிச்சன்புதூரை சேர்ந்தவர் ஜாண்சேவியர் (வயது62). இவர் கடந்த 23-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்றார். பின்னர் நேற்று அதிகாலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3½ பவுன் நகை மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் ெகாடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.