வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை


வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
x

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

திருவள்ளூர்

பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி ஸ்ரீநாத் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 37). குன்றத்தூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவர் அதே பகுதியில் வேறு ஒரு வீட்டிற்கு வாடகைக்கு குடிபோவதற்காக கடந்த 10-ந் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புது வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு பால் காய்ச்சிவிட்டு அன்று இரவு மனைவி பிள்ளைகளுடன் அந்த வீட்டில் தங்கி உள்ளார். அதன் பிறகு நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்கம் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த அரை பவுன் தங்க 120 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் ரூ.13 ஆயிரத்தை ஆகியவற்றை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சவுந்தர்ராஜன் பட்டாபிராம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story