கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x

வேலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

வேலூர்

வேலூர்

வேலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோவில் உண்டியல் உடைப்பு

வேலூரை அடுத்த ஊசூர் அருகே உள்ள வீராரெட்டிபாளையத்தில் வேப்பாத்தம்மன், கெங்கையம்மன், விநாயகர் கோவில்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்த கோவில்களின் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த வேலு என்பவர் பணியாற்றி வருகிறார்.

அவர் நேற்று முன்தினம் இரவு 3 கோவில்களிலும் பூஜை செய்து விட்டு இரும்பு கேட்டை பூட்டி சென்றார். நேற்று காலை வேலு வழக்கம்போல் பூஜை செய்வதற்காக விநாயகர் கோவிலுக்கு சென்றார்.

அப்போது கோவில் இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை திருட்டு போயிருந்தது. மர்மநபர்கள் நள்ளிரவில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதையடுத்து அவர் உடனடியாக கெங்கையம்மன் கோவில், வேப்பாத்தம்மன் கோவிலுக்கு சென்று பார்த்தார். வேப்பாத்தம்மன் கோவில் இரும்பு கேட் உடைக்கப்பட்டிருந்தது. மர்மநபர்கள் உண்டியலை உடைக்க முயன்றதும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் அவர்கள் அங்கிருந்து சென்றதும் தெரிய வந்தது.

இதுகுறித்து வேலு, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அரியூர் போலீசார், கோவில் நிர்வாகத்தினர் அங்கு சென்று பார்வையிட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் அந்த பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர், பூசாரி, கோவில் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.

அதில் விநாயகர் கோவில் உண்டியல் 10 நாட்களுக்கு முன்பாக திறக்கப்பட்டு, காணிக்கை எடுக்கப்பட்டதால் குறைந்தளவு பணமே திருட்டு போனது தெரிய வந்தது.

இந்த திருட்டு குறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிந்து கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story