வாகனம் மோதி கொத்தனார் சாவு


வாகனம் மோதி கொத்தனார் சாவு
x

வாகனம் மோதி விபத்தில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார்

மதுரை

அவனியாபுரம்,

அவனியாபுரம் அடுத்த அனுப்பானடியை சேர்ந்தவர் கருப்பையா(வயது 36). கொத்தனார். சம்பவத்தன்று இவர் சிவராத்திரி வழிபாடு செய்வதற்காக விருதுநகர் மாவட்டம் பாப்பானம் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். வலையங்குளம் ரிங்ரோடு வழியாக சென்றபோது பின்னால் வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த கருப்பையா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெருங்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் சின்ன உலகானியை சேர்ந்த சிலர் குலதெய்வம் வழிபாடு முடித்து விட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் இல்லை.


Next Story