மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு
திருவண்ணாமலையில் மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகையை திருடி சென்ற மா்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகையை திருடி சென்ற மா்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
100 நாள் வேலைக்கு சென்றனர்
திருவண்ணாமலை தாலுகா பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மனைவி பூங்காவனம் (வயது 64). இவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். 2 மகன்களும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மற்ற 3 மகள்களும் தாயுடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பூங்காவனம் மற்றும் அவரது மகள்கள் 3 பேரும் வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி காணப்பட்டது.
50 பவுன் நகை திருட்டு
அத்துடன் வீட்டில் இருந்த 50 பவுன் நகை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் திருவண்ணாமலை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.