வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகள் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவிலுக்கு சென்றார்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா ஆண்டிபட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 52). இவரது மனைவி ரியானா பானு (40). இந்த தம்பதியின் மகள் பெனாசிர்பேகம் (19). இவர்கள் 3 பேரும் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிப்பட்டி கோட்டையில் வாடகை வீட்டில் கடந்த ஓராண்டாக வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று மாைல பிரபாகரன் தனது வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் அரவக்குறிச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றார்.
11 பவுன் நகைகள் கொள்ளை
பின்னர் இரவு 7 மணி அளவில் பிரபாகரன் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தார். அப்ேபாது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் அவர் வைத்திருந்த 11 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பிரபாகரன் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.