வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு
x

திருவண்ணாமலை: வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை குபேர நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் என்பவரின் மனைவி லட்சுமி (வயது 48).

இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு தேவனந்தல் பகுதியில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த சுமார் 6 பவுன் நகைகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story