குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x

குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் மெயின் ரோட்டில் ராமுத்தேவன்பட்டி விலக்கில் மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. அத்துடன் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் குண்டாயிருப்பு, முத்துச்சாமிபுரம், கண்டியாபுரம், கே.லட்சுமிபுரம், எழுவன் பச்சேரி, காங்கர்செவல், வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெம்பக்கோட்டை வழியாக ஆலங்குளம், ராஜபாளையம், செல்லும் வாகனங்கள் இந்த வழியாக கடந்து செல்லும் போது பஸ்நிறுத்தத்தில் இருக்கும் பயணிகள் மீது தண்ணீரை வாரி இரைத்து செல்கின்றன. எனவே அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த கூட்டு குடிநீர் திட்ட குழாயை சீரமைத்து, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும். சேதமடைந்த ரோட்டை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story