குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x

அருப்புக்கோட்டையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது.

விருதுநகர்

அருப்புக்கோட்டையில் தாமிரபரணி மற்றும் வைகை குடிநீர் திட்டம் மூலம் பகிர்மான குழாய்கள் வழியாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வெள்ளக்கோட்டை கல்பாலம் அருகே குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதுபோன்று நகரின் பல இடங்களில் ஆங்காங்கே குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அடிக்கடி குடிநீர் வீணாக சாலையில் செல்வது வாடிக்கையாகி விட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் காசு கொடுத்து குடிநீரை வாங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் அருப்புக்கோட்டையில் பல பகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. வருகின்ற தண்ணீரும் இவ்வாறு வீணாக சாலையில் செல்வதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story