குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
சீர்காழியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு அரசு சார்பில் கொள்ளிடம் ஆற்றில் சித்தமல்லியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு, நகராட்சி வளாகத்தில் உள்ள நீர்த்தக்க தொட்டியில் நீர் ஏற்றப்படும். பின்னர் சுத்திகரிக்கப்பட்டு 24 வார்டுகளுக்கும் சீரான குடிநீர் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட சிங்கார தோப்பு தெருவில் நேற்று குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக கலந்து குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் மிகவும் சிரப்படுகின்றனர். எனவே உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.