ஆடிட்டரை தாக்கிய அண்ணன் கைது


ஆடிட்டரை தாக்கிய அண்ணன் கைது
x

ஆடிட்டரை தாக்கிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள சிங்கராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இருதசாமி மகன் சேசுராஜ்(வயது 33). இவர் சென்னையில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் சிங்கராயபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது அண்ணன் செபாஸ்தியானிடம்(40) இது பற்றி கேட்டபோது, அவர் சேசுராஜை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சேசுராஜ் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து செபஸ்தியானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story