ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் தம்பி கைது


ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் தம்பி கைது
x

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் தம்பி கைது செய்யப்பட்டார்.

திருச்சி

சமயபுரம்:

ஆட்டோ டிரைவர் கொலை

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் புரவி நகரை சேர்ந்த சந்திரசேகரின் மகன்கள் அரிராஜன்(வயது 42), அசோக்குமார்(40), சரவணன்(38). இதில் ஆட்டோ டிரைவரான அரிராஜன் திருமணமாகி குடும்பத்துடன் திருச்சி குட்ெஷட் ரோட்டில் வசித்து வந்தார். சரவணன் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 17-ந் தேதி புரவி நகர் சென்ற அரிராஜன், தனது பெற்றோரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது சரவணனுக்கும், அரிராஜனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சரவணன் பீர் பாட்டிலால் குத்தியதில் படுகாயம் அடைந்த அரிராஜன், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வந்தனர்.

தம்பி கைது

இந்நிலையில் நேற்று அவரை நொச்சியத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-3 கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிபதி உத்தரவின்படி சரவணனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story