போலீஸ்காரரை தாக்கிய அண்ணன்- தம்பி கைது


போலீஸ்காரரை தாக்கிய அண்ணன்- தம்பி கைது
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரரை தாக்கிய அண்ணன்- தம்பி கைது

கோயம்புத்தூர்

கணபதி

கோவை ரத்தினபுரி போலீசார் சங்கனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே சென்ற போது சில வாலிபர்கள் குடிபோதையில் தகராறு செய்து கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து கலைந்து செல்லுமாறு கூறி விட்டு சென்றனர்.

சிறிது நேரம் கழித்து போலீசார் அங்கு சென்ற போது அதே வாலிபர்கள் மீண்டும் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இதை போலீஸ்காரர் ஒருவர் கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த குடிபோதை ஆசாமிகள் 2 பேர் தகாத வார்த்தைகளால் பேசி அவரை கீழே தள்ளிவிட்டு தாக்கினர்.

இது குறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் குடிபோதையில் போலீஸ்காரரை தாக்கியது சிவானந்தா காலனியை சேர்ந்த பெயிண்டர் மணி (வயது27), அவருடைய தம்பி விஷ்ணு (23) என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவர்கள் 2 பேர் மீதும் மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-


Next Story