அண்ணன் மண்டையை உடைத்த தொழிலாளி


அண்ணன் மண்டையை உடைத்த தொழிலாளி
x

குஜிலியம்பாறையில் சொத்து தகராறு காரணமாக கட்டையால் தாக்கி அண்ணன் மண்டையை தொழிலாளி உடைத்தார்.

திண்டுக்கல்

குஜிலியம்பாறை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 57). இவரது தம்பி பொன்னுச்சாமி (50). கூலித்தொழிலாளி. இருவருக்கும், சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 17-ந்தேதி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பொன்னுச்சாமி அருகில் இருந்த கட்டையால் பெரியசாமியின் தலையில் தாக்கினார். இதில் அவருடைய மண்டை உடைந்தது. படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story