கொலை முயற்சி வழக்கில் சகோதரர்களுக்கு சிறை தண்டனை


கொலை முயற்சி வழக்கில் சகோதரர்களுக்கு சிறை தண்டனை
x

கொலை முயற்சி வழக்கில் சகோதரர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நமையூரை சேர்ந்த கந்தன் என்பவருக்கும், காலனி தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (வயது 39) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்கள் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக மங்களமேடு போலீசார் கலியமூர்த்தி தரப்பினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பெரம்பலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதில், இந்த வழக்கின் குற்றவாளிகளான கலியமூர்த்திக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அவரது தம்பி கருணாநிதிக்கும் (35), மற்றொரு தம்பியான சரத்குமாருக்கும் (32) தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.ஆயிரம் அபராதமும் மற்றும் 2 நபர்களை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார். மேற்படி கொலை முயற்சி வழக்கில் சிறப்பாக செயல்பட்டு புலன் விசாரணையை முடித்து குற்றவாளிகளின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த மங்களமேடு போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி வெகுவாக பாராட்டினார்.


Next Story