பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்
x

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

திருச்சி

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4-ஜி, 5-ஜி சேவைகளை தொடங்கிட துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய 3-வது ஊதிய திருத்தத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும். ஊழியர்களுக்கான பதவி உயர்வு கொள்கையை விரைவாக பரிசீலித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு மனிதசங்கிலி போராட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வில்லியம்ஹென்றி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருகிற 14-ந் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று மனு அளிப்பது, ஜூலை மாதம் 7-ந் தேதி புதுடெல்லியில் ஊழியர்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாக போராட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story