பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி நெட்வொர்க் சேவை வழங்க வேண்டும், கட்டாய ஓய்வு திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில், பி.எஸ்.என்.எல். கிளை ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகேசன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கிளை செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். முடிவில் கிளை பொருளாளர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story