பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., ஓய்வூதியர்களின் ஓய்வூதிய திருத்தத்தை 1-1-2017 முதல் ஊதிய திருத்த கமிட்டியின் படி 15 சதவீத பென்ஷன் உயர்வுடன், ஊழியர்களின் ஊதிய மாற்றத்தில் இருந்து விலக்கு அளித்து உடனடியாக தீர்வு காண கோரி நேற்று ஜவகர்பஜாரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அகில இந்திய பி.எஸ்.என்.எல். டிஓடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை துணை தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சேட்டு வரவேற்றார். இதில் செயலாளர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், கிளை அமைப்பு செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 31-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டமும், ஆகஸ்டு 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் தர்ணா போராட்டமும் நடத்தபோவதாக அறிவித்துள்ளனர்.