சின்னசேலத்தில்பட்ஜெட் நகல் எரிக்கும் போராட்டம்
சின்னசேலத்தில் பட்ஜெட் நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
சின்னசேலம்,
சின்னசேலத்தில் வட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மத்திய பா.ஜ.க. அரசின் பட்ஜெட் நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு விவசாய சங்க வட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்கம் வட்ட செயலாளர் மாரிமுத்து, வட்ட குழு பாபு முன்னிலை வகித்தனர்.
இதில் விவசாய தொழிலாளர்களின் நலன்களை முற்றிலும் புறக்கணித்த மத்திய அரசை கண்டித்தும், அவர்கள் வெளியிட்ட பட்ஜெட்டை கண்டித்தும் கோஷம் எழுப்பியவாறு பட்ஜெட் நகலை தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சின்னசேலம் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story