புகழூர் நகராட்சி கூட்டம்


புகழூர் நகராட்சி கூட்டம்
x

புகழூர் நகராட்சி கூட்டம் நடந்தது.

கரூர்

புகழூர் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரதாபன் முன்னிலை வைத்தார். நகராட்சி ஆணையர் கனிராஜ் வரவேற்றார். கூட்டத்தில் புகழூர் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடைமுறைப்படுத்துதல், புகழூர் நகராட்சியில் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை பொருட்கள், குடிநீர் திட்ட பொருட்கள் மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு தளவாட பொருட்கள் ஆகியவற்றை ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 45-க்கு ஏலம் விடப்பட்டது. தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் புகழூர் நகராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பெண் வார்டு கவுன்சிலர்களை பொது இடங்களில் பா.ஜ.க. கவுன்சிலர் விமர்சனம் செய்வதற்கு பெண் கவுன்சிலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

1 More update

Next Story