மாட்டு வண்டி எல்கை பந்தயம்


மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

மாட்டு வண்டி பந்தயம்

திருமயம் அருகே சித்தளஞ்சாம்பட்டி பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இளைஞர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இளைஞர்களால் 13 -ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், தேனி, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 8 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதற்கு போய் வர 8 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் முதல் பரிசை விரமதி தையல்நாயகி மாட்டு வண்டியும், 2-வது பரிசை மாவூர் ராமச்சந்திரன் மாட்டு வண்டியும், 3-வது பரிசை நல்லாங்குடி முத்தையா சேர்வை மாட்டு வண்டியும், 4-வது பரிசை மாவடு குறிச்சி பழவரசன் மாட்டு வண்டியும் பெற்றன.

பரிசு

தொடர்ந்து சிறிய மாடு பிரிவில் 22 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதற்கு போய் வர 6 மைல் தூரம் என நிர்ணயிக்கப்பட்டது. இதில் முதல் பரிசை நகரப்பட்டி வைத்தியா மாட்டு வண்டியும், 2-வது பரிசை அரிமளம் சேத்து மேல் அய்யனார் மாட்டு வண்டியும், 3-வது பரிசை கானாடுகாத்தான் பைசல் மாட்டு வண்டியும், 4-வது பரிசை பெரிய கல்லு வயல் ஆதிரா மாட்டு வண்டியும் பெற்றன.

இதையடுத்து வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பாக ஓட்டிய சாரதிக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ராயபுரம் சாலைகளில் நின்று பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


Next Story