மாட்டு வண்டி எல்கை பந்தயம்
திருவரங்குளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே வல்லத்திராகோட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.
பந்தயத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், பொன்பேத்தி, அரிமளம், திருமயம், மதுரை, காரைக்குடி, சிவகங்கை, தஞ்சாவூர், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
பரிசு
இதில் பெரிய மாடு, நடு மாடு பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் எல்லையை நோக்கி மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கண்டு களித்தனர்.
Related Tags :
Next Story