மாட்டுவண்டி எல்கைப்பந்தயம்


மாட்டுவண்டி எல்கைப்பந்தயம்
x

கடியாபட்டியில் மாட்டுவண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

அரிமளம் ஒன்றியம் கடியாபட்டியில் தமிழ் புத்தாண்டையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 20 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 7 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு போய் வர 8 மைல் தூரமாக போட்டி தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. முதல் பரிசை சிவகங்கை மாவட்டம் விரமதி தையல்நாயகி, 2-ம் பரிசு கே.புதுப்பட்டி கே.ஏ.அம்பாள், 3-ம் பரிசு வெள்ளாளப்பட்டி இளந்தேவன், 4-ம் பரிசு கொத்தமங்கலம் சேகர் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 13 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பந்தய தூரமாக போய்வர 6 மைல் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரிதன்யா ஸ்ரீ, 2-ம் பரிசு பீர்க்கலைகாடு ராஜமாணிக்கம், 3-ம் பரிசு மட்டங்கிபட்டி மீசைரவி ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் பெற்றன. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டன. பந்தயத்திற்கான ஏற்பாடுகளை கடியாபட்டி ஊரார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.


Next Story