மீமிசல் அருகே மாட்டு வண்டி பந்தயம்


மீமிசல் அருகே மாட்டு வண்டி பந்தயம்
x

மீமிசல் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள சிறுகடவாக்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிங்கமுக காளி, கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆடிமாத திருவிழாவையொட்டி கிராமத்தார்கள் சார்பாக முதலாம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. பின்னர் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசும், கேடயமும் வழங்கப்பட்டன.

இந்த பந்தயத்தை ஏராளமானோர் கண்டு களித்தனர். பாதுகாப்பு பணிகளை மீமிசல் போலீசார் செய்து இருந்தனர்.


Next Story