மாட்டு வண்டி பந்தயம்
தேவகோட்டை அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் உள்ள நடுவூர் நாச்சியம்மன் கோவிலில் ஆவணி சுற்று பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இதில் பெரியமாடு, சின்னமாடு என 2 பிரிவுகளாக போட்டி நடந்தது. இதில் பெரியமாடு பந்தயம் 8 மைல் தூரமும், சிறிய மாட்டு வண்டி பந்தயம் 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.
பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் புதுக்கோட்டை மாவட்டம் இடையன்காடு பரணி மாட்டுவண்டி முதலிடமும், பழவரசன் ஆறுமுகம் மாட்டுவண்டி 2-வது இடமும், ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூர் இ.எம்.எஸ். முகமது, பொய்யாநல்லூர் அயன் அஸ்ஸாம்மாட்டு வண்டிகள் 3-வது இடமும் பிடித்தன. சின்ன மாட்டு வண்டி போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் பிரவீன் சாத்தம்பத்தி சரவணன் மாட்டுவண்டி முதலிடமும், தேவகோட்டை கண்டதேவி மருதுபிரதர்ஸ் மாட்டுவண்டி 2-வது இடமும், வெளிமுத்தி வாஹினி மாட்டுவண்டி மற்றும் மதுரை மாவட்டம் பரவை சிலைகாளி அம்மன் மாட்டுவண்டி 3-வது இடமும் பிடித்தன. வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு வேட்டி, துண்டு, ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.