கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 28 Sep 2022 6:45 PM GMT (Updated: 28 Sep 2022 6:45 PM GMT)

சிவகங்கை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை அருகே முடிகண்டம் கிராமத்தில் உள்ள சுந்தரவள்ளியம்மன் மந்தைக்கருப்பன் கோவில் வருடாந்திர சிறப்பு பூஜையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் முடிகண்டம்-கரும்பாவூர் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 51 வண்டிகள் கலந்துகொண்டன. பெரியமாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என இருபிரிவாக போட்டி நடந்தது.

முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்துகொண்டன. அதில், முடிகண்டம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து வண்டி முதல் பரிசையும், 2-வது பரிசை மாங்குளம் அழகு மற்றும் பரவை சோனைமுத்து வண்டியும், 3-வது பரிசை மட்டங்கிப்பட்டி காவ்யா மற்றும் புலிமலைப்பட்டி நீதிதேவன் வண்டியும் பெற்றது.

பரிசுகள்

சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 33 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற முதல் பிரிவில் முதல் பரிசை நாட்டரசன்கோட்டை ஆண்டி வண்டியும், 2-வது பரிசை பரவை அம்மாபொண்ணு வண்டியும், 3-வது பரிசை திருவாதவூர் சிவகார்த்திகேயன் வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை சாத்திக்கோட்டை கருப்பையா மற்றும் நெய்வாசல் பெரியசாமி வண்டியும், 2-வது பரிசை விராமதி செல்வமணி வண்டியும், 3-வது பரிசை பாகனேரி பிரதாப்வெள்ளையன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story