மாட்டு வண்டி பந்தயம்
மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி
கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட தளக்காவூர் மானகிரியில் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் மானகிரி-கல்லல் சாலையில் நடைபெற்றது. இந்த போட்டியில் மொத்தம் 33 வண்டிகள் கலந்து கொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை ஏரியூர் பெத்தாச்சி அம்பலம் மற்றும் இளந்தங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி வண்டியும், 3-வது பரிசை மருங்கூர் முகமது வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை பீர்கலைக்காடு மாங்குடி சாத்தைய்யனார் வண்டியும், 2-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும், 3-வது பரிசை தளக்காவூர் கரண் மற்றும் அதிகரை வேங்கை சேர்வை வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.