மாட்டு வண்டி பந்தயம்


மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 14 May 2023 12:15 AM IST (Updated: 14 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடியை அடுத்த கானாடுகாத்தான் அருகே தேத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள சக்திவிநாயகர் கோவில் சந்தன காப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் தேத்தாம்பட்டி-காரைக்குடி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 24 வண்டிகள் கலந்து கொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன்சாமிகுமார் வண்டியும், 2-வது பரிசை குப்பச்சிபட்டி வைரம் மற்றும் அரும்பனூர் ரமேஷ்பாலாஜி வண்டியும், 3-வது பரிசை கழனிவாசல் லிங்கேஸ், 4-வது பரிசை விராமதி கருப்பையா வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 16 வண்டிகள் கலந்துகொண்டு கோட்டணத்தாம்பட்டி ரவி வண்டியும், 2-வது பரிசை விராமதி சஸ்மிதா மற்றும் கோட்டணத்தாம்பட்டி சிவபாலன் ஆகியோர் வண்டியும், 3-வது பரிசை தேத்தாம்பட்டி நாகலிங்கம் வண்டியும், 4-வது பரிசை உஞ்சனை உமாதேவி மற்றும் பெத்தாட்சி குடியிருப்பு ராக்கச்சியம்மன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story