மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலூர் தாலுகா அலுவலகம் முன்பு மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க தனி குவாரி அமைத்து தரக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருக்கோவிலூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கே.விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.செந்தில், கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.வேல்மாறன், சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் எ.வீராசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் எம்.ஏழுமலை, இளைஞர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மு.சிவக்குமார், நிர்வாகி பி.முத்து, செயலாளர் ஆ.ரமேஷ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story