மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்


மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
x

திருவையாறு அருகே அரசு மணல் குவாரியில் மணல் எடுக்க அனுமதி கேட்டு மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு அருகே அரசு மணல் குவாரியில் மணல் எடுக்க அனுமதி கேட்டு மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

திருவையாறு அருகே உள்ள மருவூரில் அரசுக்கு சொந்தமான மணல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் ஆன்லைன் மூலம் மணல் விற்பனை நடைபெற்றுவருகிறது.இந்தநிலையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்களுக்கும் மணல் எடுக்க அனுமதி கேட்டு சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில், ஒன்றியச் செயலாளர் ராஜா, விவசாய சங்க மாவட்ட செயலாளர் பழனியய்யா, ஒன்றியக்குழு உறுப்பினர் பிரதீப்ராஜ்குமார், மற்றும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து பொதுபணித்துறை அதிகாரிகள் கல்யாணசுந்தரம், மாரியப்பன், திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், மற்றும் போலீசார் மாட்டு வண்டி தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்று அனைத்து வண்டிகளுக்கும் மணல் ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்பட்டது.மேலும் வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் ஆன்லைனில் பதிவு செய்து மணல் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியதன் பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு மாட்டு வண்டியில் மணல் ஏற்றி சென்றனர்.


Next Story