மாட்டுவண்டி பந்தயம்


மாட்டுவண்டி பந்தயம்
x
தினத்தந்தி 1 Aug 2023 12:30 AM IST (Updated: 1 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாட்டு வண்டி 8 ஜோடிகள் சிறிய மாட்டு வண்டி 21 ஜோடிகளும் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் பங்கெடுத்த 8 ஜோடிகளில் முதலாவதாக பாகனேரியை சேர்ந்த புகழேந்தி, இரண்டாவது சிங்கம்புணரி பாகுபலி குருப்ஸ், மூன்றாவதாக கிடாரிபட்டி தேர் கொண்ட கருப்பர், நான்காவது எஸ்.எஸ். கோட்டை சுப்பு மாடு வெற்றி பெற்றன.. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 21 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதலில் சாத்திக்கோட்டை கருப்பையா சேர்வை வண்டியும், இரண்டாவதாக சத்திரப்பட்டி ஜெய பாலகிருஷ்ணன், மூன்றாவதாக நரசிங்கம்பட்டி கார்முகில்ராஜா, கள்ளந்திரி நகுலன் சேதுபதி, நான்காவது சின்ன மாங்குளம் அழகு, ஐந்தாவதாக கிடாரிப்பட்டி பாண்டியராஜன், ஆறாவதாக சிங்கம்புணரி ராஜசேகர் ஆகிய வண்டிகள் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற வண்டிகளுக்கும் சிறப்பாக வண்டி ஓட்டியவர்களுக்கும் ரொக்க பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பி.என்.எஸ்.எஸ். ராஜசேகரன் நினைவாக பாகுபலி குரூப்ஸ் நடத்தினர்.

1 More update

Next Story