கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே எருதுவிடும் விழா; 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு
எருதுவிடும் விழாவை முன்னிட்டு அனக்கொடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அனக்கொடி கிராமத்தில் எருதுவிடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்று காலை தொடங்கிய இந்த எருதுவிடும் விழாவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இந்த விழாவை கண்டு களிக்க சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர். எருதுவிடும் விழாவை முன்னிட்டு அனக்கொடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story