குண்டும், குழியுமாக காணப்படும் சாலை


குண்டும், குழியுமாக காணப்படும் சாலை
x

சீயாத்தமங்கை-திருமருகல் இடையே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

சீயாத்தமங்கை-திருமருகல் இடையே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை அகலப்படுத்தும் பணி

திட்டச்சேரி-திருமருகல் இடையே நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் சீயாத்தமங்கை -திருமருகல் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. பணிகள் தொடங்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாகியும் சாலையில் ஜல்லி கற்கள் மட்டுமே கொட்டப்பட்டு ரோலர் கொண்டு சமம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 3 மாதமாக டிராக்டர்களின் மூலம் சாலையில் தண்ணீர் தெளித்து வருகின்றனர். தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறத. இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சாலைகளில் உள்ள ஜல்லி கற்களால் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

நடவடிக்கை

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story