குண்டும், குழியுமாக காணப்படும் சாலை

திருவாரூர் அருகே, கேக்கரை-பழையாவலம் இடையே குண்டும், குழியுமாக சாலை காணப்படுகிறது. சாலை சேதமடைந்துள்ளதால் இரவு நேரத்தில் பஸ் இயக்கப்படாததால் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவாரூர் அருகே, கேக்கரை-பழையாவலம் இடையே குண்டும், குழியுமாக சாலை காணப்படுகிறது. சாலை சேதமடைந்துள்ளதால் இரவு நேரத்தில் பஸ் இயக்கப்படாததால் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவாரூர் அருகே, கேக்கரை-பழையாவலம் இடையே குண்டும், குழியுமாக சாலை காணப்படுகிறது. சாலை சேதமடைந்துள்ளதால் இரவு நேரத்தில் பஸ் இயக்கப்படாததால் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குண்டும், குழியுமான சாலை
திருவாரூர் அருகே உள்ளது பள்ளிவாராமங்கலம் கிராமம். திருவாரூரில் இருந்து இந்த கிராமத்தின் வழியாக, அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் செல்லும் முக்கிய சாலையாக கேக்கரை-பழையாவலம் சாலை உள்ளது.இந்த சாலையை பழையாவலம் பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் திருவாரூருக்கு சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் இந்த சாலையின் வழியாக தான் திருவாரூருக்கு வந்து செல்கின்றனர். தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் அவதி
இந்த சாலையின் வழியாக ஒரு அரசு நகர பஸ்சும், 4 மினி பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. குறுகிய சாலையாக இருப்பதால் பஸ் வரும் நேரத்தில் ஒதுங்க வழியின்றி வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளித்துவாரமங்கலம் கிராம மக்கள் கூறுகையில், பழையாவலம் பகுதியில் இருந்து பள்ளித்துவாரமங்கலம், கேக்கரை உள்ளிட்ட பகுதிகள் வழியாக திருவாரூருக்கு பல்வேறு வேலைகளுக்கு சென்று வருகிறோம். இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை சேதமடைந்துள்ளதால் இந்த வழியாக இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் தற்போது காலை ஒருமுறை மட்டுமே வந்து செல்கின்றது. சில நேரங்களில் அதுவும் வருவதில்லை.
இரவில் பஸ் இன்றி பெண்கள் சிரமம்
இரவு 9 மணிக்கு மேல் தனியார் மினி பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் இரவில் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
விபத்துகளில் சிக்கியவர்களை சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வாகனங்களும் விபத்தில் சிக்கி கொள்கின்றன. சாலை சேதமடைந்து இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களும், இந்த பகுதிக்கு வருவதில்லை. இதன்காரணமாக பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருவாரூருக்கு சென்று வாங்கி வருகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
விவசாய இடுபொருட்களை கொண்டு செல்வதிலும், அறுவடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.