வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
கருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு போனது.
சேலம்
கருப்பூர்:-
கருப்பூரில், உள்ள ஸ்ரீ பூமி நகர் பகுதி சேர்ந்தவர் தனக்கோடி, இவரது மகன் நவீன் குமார் (வயது 24). இவரது தாத்தா இறந்து விட்டதால், இறுதி சடங்கில் பங்கேற்க வீட்டை பூட்டிவிட்டு தாயாருடன் வெளியூர் சென்று விட்டார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவை திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.70 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story