ஆர்ப்பரித்து கொட்டும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி


ஆர்ப்பரித்து கொட்டும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி
x

பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெரும்பாறை, கானல்காடு, தடியன்குடிசை, பெரியூர், குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் தொடர்மழை பெய்தது. இதன் எதிரொலியாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் நீரூற்றுகள் தோன்றியுள்ளன. மேலும் நீர்வீழ்ச்சிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் அருவி போல் கொட்டுகிறது.அதன்படி பெரும்பாறை அருகே இயற்கை எழில் கொஞ்சும் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் குளியல் போட சுற்றுலா பயணிகள் தற்போது குவிந்து வருகின்றனர்.

மேலும் இந்த நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது. கடந்த ஒரு வாரமாகவே நீர்வீழ்ச்சி பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து அருவி போல் கொட்டுவதால் ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.


Next Story