அரசு பஸ் டயர் வெடித்து பயணிகள் அலறியடித்து ஓட்டம்


அரசு பஸ் டயர் வெடித்து பயணிகள் அலறியடித்து ஓட்டம்
x

அரசு பஸ் டயர் வெடித்து பயணிகள் அலறியடித்து ஓடினர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

ராமேசுவரம் பஸ் பணிமனையில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பஸ் 52 பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்தது. இந்த பஸ் சாயல்குடி வந்தபோது திடீரென முன்பக்க டயர் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இதனால் பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர். உடனடியாக டிரைவர் பஸ்சை லாவகமாக நிறுத்தினார். இதையடுத்து பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக இறங்கி சென்றனர். பின்னர் ராமேசுவரம் பணிமனையில் இருந்து 5 மணி நேரத்திற்கு பிறகு மாற்று டயர் வந்த பின்னர் பஸ் மீண்டும் திருச்செந்தூருக்கு குறைந்த அளவிலான பயணி களுடன் சென்றது. இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:- நீண்ட தூர சுற்றுலா, வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் முறையான பராமரிப்பின்றி இயக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர்.


Related Tags :
Next Story