திருச்செங்கோட்டில் பேரனை பஸ் நிலையத்தில் விட்டு சென்ற பாட்டி போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்
திருச்செங்கோட்டில் பேரனை பஸ் நிலையத்தில் விட்டு சென்ற பாட்டி போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தன
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு இறையமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24). இவருடைய மனைவி மேரி (20). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் அஜித்குமார் மனைவி மேரி, குழந்ைத மற்றும் மனநலம் பாதித்த தனது தாயாருடன் ஈரோட்டுக்கு துணி எடுக்க புறப்பட்டார். அவர்கள் திருச்செங்கோட்டில் இருந்து பஸ்சில் புறப்பட்டனர். கடைசி சீட்டில் பேரனுடன் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் திடீரென மாயமானார்.
பஸ் ஈரோடு சென்றதும் தாய் மற்றும் மகனை காணாததால் அதிர்ச்சி அடைந்த அஜித்குமார், ேமரி ஆகியோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் மனநலம் பாதித்த பெண் குழந்தையை அரசு டவுன் பஸ் அடியில் வைத்து விட்டு சென்றதை பார்த்த மோகன் என்பவர் குழந்தையை மீட்டு திருச்செங்கோடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் பஸ் நிலையத்துக்கு சென்று குழந்தையை மீட்டு பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து திருச்செங்கோடு போலீஸ் நிலையத்துக்கு வந்த பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.