முதன்முறையாக தங்கள் ஊருக்கு வந்த டவுன் பஸ்சை கரம்ேகார்த்து வரவேற்ற மாணவர்கள்
முதன்முறையாக தங்கள் ஊருக்கு வந்த டவுன் பஸ்சை கரம்ேகார்த்து மாணவர்கள் வரவேற்றனர்.
கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் ஊராட்சி கீழவலசை கிராமத்திற்கு இதுவரை அரசு பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதுகுறித்து கீழ வலசை கிராம மக்கள் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ராஜ கண்ணப்பனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து கீழ வலசை கிராமத்திற்கு பஸ் வசதி செய்து தர ஏற்பாடு செய்தார்.
அதன்படி பேரையூர், கீழவலசை உட்பட கிராம மக்கள் பயனடையும் வகையில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. முதல்முறையாக கிராமத்துக்கு சென்ற பஸ்சை மாணவர்கள், கிராம மக்கள் கூடி கரம்கோர்த்து அரவணைத்து வரவேற்பு அளித்தனர். அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், மாவட்ட கவுன்சிலர் பெருநாழி போஸ், சசிகுமார், பேரையூர் ஊராட்சி மன்ற தலைவர் ரூபி ஆகியோர் தலைமையில் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பாண்டி, ஒன்றிய துணை செயலாளர் நேதாஜி சரவணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கொடி, ஆசிரியர் கிருஷ்ண மூர்த்தி, புதுக்கோட்டை முத்துராமலிங்கம், கமுதி வட்டார காங்கிரஸ் தலைவர் பழக்கடை ஆதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.