புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது
தேவகோட்டை
தேவகோட்டை அருகே கள்ளிக்குடி கிராமத்தில் இருந்து தேவகோட்டை நகருக்கு புதிய பஸ் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒன்றிய தலைவர் பிர்லாகணேசன் தலைமையில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பஸ் தேவகோட்டை-புலியடிதம்மம் செல்லும் போது எழுவன்கோட்டை ஈகரை, கள்ளிக்குடி கிராமத்திற்கு வந்து புதுக்கோட்டை பெரியகாரை மற்றும் வேலாயுதப்பட்டினம் வழியாக புலியடிதம்மம் செல்கிறது.
மேலும் புலியடிதம்மத்தில் இருந்து இதே மார்க்கமாக தேவகோட்டைக்கு காலை மாலை ஆகிய இரு வேளைகளில் வந்து செல்லும். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் அப்புச்சி சபாபதி, தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் பூபாலசிங்கம், வக்கீல் சஞ்சய், மருத்துவர் பூமிநாதன், போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல மேலாளர் சிங்காரவேல், வர்த்தக பிரிவு மேலாளர் நாகநாதன், கிளை மேலாளர் சொக்கலிங்கம், பொறியாளர் பழனி, டிரைவர் திருமாறன், கண்டக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.