கார் மீது பஸ் மோதல்


கார் மீது பஸ் மோதல்
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் கார் மீது பஸ் மோதியது.

விழுப்புரம்

திண்டிவனம்;

சென்னை ஒரகடத்தை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 61). இவர் சென்னையில் இருந்து திண்டிவனத்துக்கு காரில் வந்தார். திண்டிவனம் மேம்பாலம் அருகில் வந்தபோது, சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. இதில் காரின் இடது பக்க பின்புறமுள்ள டயர் வெடித்தது. இதையடுத்து காரும், பஸ்சும் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பஸ்சில் பயணம் செய்த 60-க்கும் மேற்பட்ட பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைக்க ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்ததும் திண்டிவனம் போலீசார் விரைந்து வந்து பயணிகளை சமாதானப்படுத்தி, மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.


Next Story